Tuesday, March 29, 2011

வசைகளின் சில்லரை சப்தங்கள்.....






பெரும்பாலான,
பிரதான சாலைகளில்,
நெடுக காணமுடிகிறது,
அழுக்கை ஆடையாய் அணிந்து,
யாசிப்பவர்களை....

வயிற்று பசியினால்,
கையில் ஏந்துகிற,
தட்டை விட,
உடல் பசியின் கூடலால்,
அவள் தோளில் சுமக்கிற குழந்தை,
யாசித்தலை,
அடுத்த தலைமுறைக்கு,
அழைத்து செல்கிற,
பிரதிநிதியென்பதில் ,  
கலவரப்படுகிறது,
என் ஆழ்மனது..

விளைவாக, 
தவிர்க்கிறேன் ஈதலை ....

இச்செய்கையில்,
கொதிக்கிற அவள்,
என் செவி தட்டுகளில் இடுகிற,
வசைகளின் சில்லரை சப்தங்கள்,
பெரும் அதிர்வுகளோடு,
ஒலித்தபடியிருக்கின்றன....

3 comments:

  1. சாட்டையடி:

    வயிற்று பசியினால்,
    கையில் ஏந்துகிற,
    தட்டை விட,
    உடல் பசியின் கூடலால்,
    அவள் தோளில் சுமக்கிற குழந்தை,
    யாசித்தலை,

    ரசனை:
    அழுக்கை ஆடையாய் அணிந்து,
    யாசிப்பவர்களை

    ReplyDelete
  2. thanks machi.. keep giving comments on my posts..

    ReplyDelete
  3. அந்த வசைகளின் சப்தங்களில் பின்னால் வேறு ஏதோ ஒன்று நிச்சயம் இருக்ககூடும் ..

    அதையும் பதிவு செய்யுங்கள் ..

    அது
    உங்களுக்கு ஏற்பட்ட பெரும் அதிர்வுகளுக்கு காரணமாக இருக்கும் .. அல்லது அவள் உடுத்தி இருக்கிற அழுக்கு ஆடைக்கு பின் இருக்கும் வரலாறாக இருக்கும்

    அருமை ..

    ReplyDelete

Thanks for reading..